மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா; அமெரிக்கா, தென்கொரியாவை சீண்டும் செயல் என விமர்சனம்!

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தி, அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் பதிலடி கொடுத்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு வடகொரியா அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தம்முடைய எதிரி…

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தி, அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் பதிலடி கொடுத்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு வடகொரியா அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தம்முடைய எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதனிடையே, கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா – அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. அணுசக்தி தாக்குதல் ஒத்திகையின் ஒரு பகுதியாக குறுகிய தூர இலக்குகளை தாக்கும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.