முக்கியச் செய்திகள் விளையாட்டு

சஞ்சு சாம்சன் சரவெடி வீண்: ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத்

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக எவின் லெவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

லெவிஸ் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்தார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு அதிரடி சரவெடியில் இறங் கிய சஞ்சு சாம்சன், 41 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், ஐதராபாத் அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளி னார். அவர் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டு களை வீழ்த்தினார். சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

165 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஜேசன் ராயும் சஹாவும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். சஹா 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவருடன் கேப்டன் வில்லியம்சன் இணைந்தார். ஜேசன் ராய், அதிரடியாக ஆடினார். 42 பந்துகளில் 60 ரன்கள் குவித்த அவர் சக்காரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரியம் கார்க் டக் ஆவுட் ஆக, கேப்டன் வில்லியம்சன் நிதானமாக ஆடி, அணியை வெற்றி பெற வைத்தார். 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. வில்லியம்சன் 41 பந்துகளில் 51 ரன்களுடன் அபிஷேக் சர்மா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Advertisement:
SHARE

Related posts

தொலைந்துபோன சாவி: உடைக்கப்பட்ட வாக்குப்பெட்டி

Saravana Kumar

தமிழ்நாட்டில் 100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை

Saravana Kumar

கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை!

Halley karthi