முக்கியச் செய்திகள் விளையாட்டு

முழங்காலில் காயம்: ஐபிஎல் தொடரில் இருந்து குல்தீப் விலகல்

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, குல்தீப் யாதவ் ஐபிஎல் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். இந்திய அணிக்காக 7 டெஸ்ட், 65 ஒரு நாள், 23 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 174 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் பதினான்காவது ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று இருந்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த அவருக்கு பயிற்சியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

சமீபத்தில் தான் அவர், முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அணியில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

Gayathri Venkatesan

யூடியூபர் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Halley karthi

டோக்கியோ சென்றடைந்த இந்திய வீரர்கள்