இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஜுகி ரஜினியைபோல ஸ்டைல் செய்து ஜெயிலர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்டு 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 900 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 4000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை பிரதான திரையரங்குகளில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. படம் வெளியாகும் சமயத்தில் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்று உள்ளார்.
தியேட்டர்களில் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் ரஜினியின் புகைப்படங்கள் நிறைந்த பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும், பாட்டசு வெடித்தும், மேள தாளங்கள் வைத்து பாடல்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.
முதல் நாளில் இந்தப்படம் ரூ100 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ஜெயிலர் படம் வெலியான இரண்டு நாட்களில் மட்டும் உலகளவில் 95.78 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிரது.
தொடர்ச்சியாக படத்திற்கு குவிந்து வரும் பாசிட்டிவ் விமர்சனத்தால் அடுத்தடுத்த நாட்களில் ‘ஜெயிலர்’ படம் மேலும் பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஜூகி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தின் Signature ஸ்டைலான கண்ணாடி கையால் வேகமாக திருப்பி போடுவது போல செய்து காட்டி ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஹிரோஷி சுஜூகியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகவே பரவி வருகிறது.
Vannakkam!@Rajinikanth, #Japan also loves you a lot!🤝#Jailer #rajinifans pic.twitter.com/ced3GUiHi7
— Hiroshi Suzuki, Ambassador of Japan (@HiroSuzukiAmbJP) August 11, 2023