பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும்  ஜான்வி கபூர்; லேட்டஸ்ட் அப்டேட்!

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக  ஜான்வி கபூரை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை…

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக  ஜான்வி கபூரை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ஹிந்தியில் முக்கிய நாயகியாக வலம் வருகிறார். தமிழில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் ஜான்வி.

இந்நிலையில், இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக  ஜான்வி கபூரை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தை தயாரிக்கவிருப்பது, கமலின், ‘ராஜ்கமல் இன்டெர்னஷனல்’ நிறுவனம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அஜித்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன், தற்போது இந்த படத்தை தான் இயக்கப்போகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.