பாதுகாப்பு அம்சங்கள் இல்லையெனில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கூடாது என ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் மிட்டல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக அளவு ஜல்லிக்கட்டு
நடைபெறுவது வழக்கம் அரசு அனுமதி பெற்று ஆண்டிற்கு 156 ஜல்லிக்கட்டுகள் 80
க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டுகள் 20க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டுகள்
ஆகியவை நடைபெறுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு கடந்த எட்டாம் தேதி தொடங்கியது இதுவரை மூன்று
ஜல்லிக்கட்டு மற்றும் ஒரு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று உள்ளது.
இதில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியது 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிச் செல்லும் டாட்டா ஏஸ் வாகன விபத்துக்குள்ளாகி இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் இரண்டு நபர்கள்
உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசின் கால்நடை நல வாரிய
ஜல்லிக்கட்டு ஆய்வு குழு உறுப்பினர் மிட்டல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட
அதிகாரிகளோடு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை மூன்று ஜல்லிக்கட்டுகள் மற்றும் ஒரு
மஞ்சுவிரட்டு போட்டி தான் நடைபெற்றுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள்
திருப்திகரமாக இல்லை என்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக
பின்பற்றப்படவில்லை. என்ற புகார்கள் வந்துள்ளதாகவும் உச்ச நீதிமன்ற
வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வில்லை என்றால் அந்த
ஜல்லிக்கட்டிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கருத்தையும்
அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காளைகள் துன்புறுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் காளைகளின்
கொம்புகளில் பிளாஸ்டிக் குப்பைகள் போட வேண்டும் என்றும் அவர்
அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோன்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஜல்லிக்கட்டு காளைகள் வாகனங்களில் அதிக அளவு ஏற்றி வருவதை கண்காணித்து அதனை தடுத்து நிறுத்த வேண்டும். மனிதர்களின் உயிர்கள் மட்டுமல்லாது காளைகளின் உயிர் முக்கியம் இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் ஜல்லிக்கட்டுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்