தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது -விஜயபாஸ்கர்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க
கூடாது, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் மைய் வழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள்
அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை குறைக்க கூடாது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.


அத்துடன், பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும் என்றால் காளைகள் மற்றும் மாடுபிடி
வீரர்களின் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும். விழா கமிட்டியினர் மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஜல்லிக்கட்டை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் வெற்றிலை பாக்கு கொடுத்து காளைகளை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரும் சம்பவம் தற்போது நடந்து வருவதாக கூறினார்.

மேலும், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் ஆன்லைன் முறையில் பதிவு செய்வதால் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று காளைகளுக்கும் மாடுபுடி வீரர்களுக்கும் கட்டாயமாக அரசு சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.