‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகன் கைது!

‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகனை, மதுபோதையில் தகராறு செய்ததாக கூறி காவல்துறையினர் கைது செய்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவில் தனி…

‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகனை, மதுபோதையில் தகராறு செய்ததாக கூறி காவல்துறையினர் கைது செய்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் மலையாள நடிகர் விநாயகன். கேரளாவை சேர்ந்த இவர், எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் இருந்து அதிகளவு சத்தம் வந்ததாக அக்கம்பக்கத்தினர் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

மதுபோதையில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட விநாயகன், அங்குள்ள அதிகாரியை தாக்கி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து எர்ணாகுளம் வடக்கு காவல்துறையினர் விநாயகனை கைது செய்தனர். காவல் நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததால், அவரை கைது செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: ஆயுத பூஜையை ஆட்டோ ஓட்டுநர்களுடன் கொண்டாடிய ‘லெஜண்ட்’ சரவணன்!

மேலும் விநாயகன் மதுபோதையில் இருந்ததை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  எர்ணாகுளம் வடக்கு காவல்துறையினர் நடிகர் விநாயகனை கைது செய்தது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.