காட்டுமன்னார் கோயில் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள தெற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்த நிலையில் இளம்பெண் கர்ப்பமாகி உள்ளார்.
ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் மணிகண்டன் ஏமாற்றி வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் மணிகண்டன் மீது கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து மணிகண்டனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.








