முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

குதிரை, பூனை…பிரபல நடிகைக்கு சுகேஷ் கொடுத்த ரூ.10 கோடி மதிப்பு பரிசு

பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுபவர், சுகேஷ் சந்திரசேகர். இரட்டை இலை சின்னத்தை மீட்க, டி.டி.வி. தினகரன் தரப்புக்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு, சென்னை பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதற்கிடையில், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் அவர் காதலி லீனா மரியாபாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

நோரா பதேஹி, ஜாக்குலின்

இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக், ஜாக்குலின் பெர்னாண்டஸும் சுகேஷும் காதலித்து வந்தனர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். அதை ஜாக்குலின் வழக்கறிஞர் இதை மறுத்திருந்தார். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது படுக்கையறையில் இருந்தவாறு சுகேஷ் கன்னத்தில், ஜாக்குலின் கொடுக்கும் செல்ஃபி முத்த புகைப்படம், இந்தி திரையுலகில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், சுகேஷ் திகார் சிறையில் இருந்து ஜாமினில் வந்த பிறகு தனி விமானத்தில் சென்னை வந்த ஜாக்குலின், சுகேஷ் சந்திரசேகரை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்தார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது

அதோடு, நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கி இருப்பதாகவும் அதில் ரூ.52 லட்சம் மதிப்பிலான குதிரை, 9 லட்சம் மதிப்பிலான 4 பெர்சியன் பூனைகளும் அடங்கும் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக மற்றொரு பாலிவுட் நடிகை நோரா பதேஹிக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் விலை உயர்ந்த ஐபோன் ஒன்றையும் சுகேஷ் பரிசளித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

Advertisement:
SHARE

Related posts

திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்படும்: அமைச்சர் செல்லூர் ராஜு

Niruban Chakkaaravarthi

நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த 3 பேர் கைது!

Jeba Arul Robinson

திமுக அரசு செய்தது என்ன? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Ezhilarasan