முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ரூ.3 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான யானைத் தந்தங்களை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சிலர் விலையுயர்ந்த யானைத் தந்தங்களை
கடத்தி வருவதாக சிவகங்கை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனத்துறையினர் தீவிர விசாரனையில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதற்கட்டமாக சந்தேகத்தின் பேரில் மானாமதுரை, கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சங்கர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் வனத்துறையினருக்கு சந்தேகம் மேலும் அதிகரித்தது.

இதனையடுத்து சங்கரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் யானைத் தந்தத்தை கடத்தியதாக உண்மையை ஒப்புக்கொண்டான். மேலும் யானை தந்தங்களை காளையார்கோவிலை அடுத்துள்ள மணியங்குடி கண்மாய்க்குள் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மணியங்குடி கண்மாய்க்கு சென்ற வனத்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்களை கைப்பற்றினர்.

சுமார் 9.46 கிலோ எடையுள்ள 2 யானைத் தந்தங்களின் மதிப்பு 3 கோடி ரூபாய் என்று வனத்துறையினர் கணித்துள்ளனர். மேலும் சங்கருக்கு உதவியதாக திருப்பூர் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த ஜெயக்குமார், விருதுநகர் வடமலைக்குறிச்சியை சேர்ந்த கணேஷ் பாண்டி ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சித்தா பல்கலைக்கழகம் பற்றி விளக்கம் கோரிய ஆளுநர், பதில் தயாரிக்கும் தமிழ்நாடு அரசு

EZHILARASAN D

கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்: தொடரும் விசாரணை!

Arivazhagan Chinnasamy

தமிழ்நாட்டிற்கு 7 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

Gayathri Venkatesan