யானை தந்தங்களை திருடியவர்கள் கைது

 யானை தந்தம் விற்றதாக ஓசூர் பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்த தமிழக போலிஸார் கர்நாடகா போலீஸாரிடம் அவர்கறை ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலம் ஹெப்பகுடி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் பொம்மசந்திரா என்ற இடத்தில்…

 யானை தந்தம் விற்றதாக ஓசூர் பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்த தமிழக போலிஸார் கர்நாடகா போலீஸாரிடம் அவர்கறை ஒப்படைத்தனர்.

கர்நாடக மாநிலம் ஹெப்பகுடி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் பொம்மசந்திரா என்ற இடத்தில் கடந்த வாரம் 6 நபர்கள் 2  தந்தங்களுடன் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை வட்டம் நமிலேரி கிராத்தைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் பெட்டமுகிலாளம் கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் ஆகியோர் தந்தங்களை கடத்தியது தெரியவந்துள்ளது.

மேலும், தந்தங்களை திருடிய முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் இருப்பது தெரியவந்தது. எனவே, போலீசார் ஓசூர் வனஉயிரின் காப்பாளரிடம் தந்தங்களை கடத்திய குற்றவாளிகளை கைது செய்வதற்கு உதவி கோரினர்.

 

வேண்டுகோளிற்கினங்க வனஉயிரின காப்பாளர் கார்த்திகாயினி அவர்களின் உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. வனத்துறையினர் தலைமறைவாகியிருந்த நபர்களின் நடமாட்டங்கள் குறித்து தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு செய்து வந்தனர்.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு பெட்டமுகிலாளம் கிராமத்தைச் சேர்ந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் பவுன்ராஜ், பசவராஜ் என்பதும் யானைத் தந்தங்களை ஹரிஷ் என்ற நபருக்கு விற்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மேல் விசாரணைக்காக இருவரையும் கைது செய்து கர்நாடக காவல்துறையினரிடம் தமிழ்நாடு போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.