ரத்தம் படத்தின் அடுத்த அப்டேட் இன்று காலை 10:00 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்து வரும் “ரோமியோ” திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “ரோமியோ” திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ரத்தம். இப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விஜய் ஆண்டனி தன் டுவிட்டர் பக்கத்தில், “என்ன சி.எஸ். அமுதன் ரத்தம் வருதாமே உடம்ப பாத்துக்கங்க…”.என்று பதிவிட்டிருந்தார். இதற்கு சி.எஸ்.அமுதன்,” ஆமா நண்பா! ரத்தம் பாக்கற நேரம் வந்திருச்சு. நாளைக்கு காலைல 10 மணிக்கு” என்று பதிட்டுள்ளார். இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.







