அரசு மருத்துவமனைகளில் ஆட்சியர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளும் படி தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..
“தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு மற்றும் விநியோகத்தை கண்காணித்து, தேவையான மருந்துகளின் சீரான விநியோகம் செய்திட உத்தரவிட வேண்டும்.
பொது சுகாதாரம், துப்பரவுப் பணி, மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
ஆட்சியர்களின் ஆய்வு அறிக்கைகள் மற்றும் விரிவான விளக்கங்களை சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளரிடம் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்” என தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.







