தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, உணவகத்தில் தொழிலாளி ஒருவர் இட்லிகளை மிக வேகமாக சமைக்கும் வீடியோவை பகிர்ந்து அதில் மனதை தொடும்படியான சில வார்த்தைகளை வரிகளாக எழுதி ட்வீட் செய்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 1 கோடியே 4 லட்சம் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை அதில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர். இது தவிர, அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் அவரது பல ட்வீட்களில் நம்மால் காணமுடியும்.
அந்த வகையில், சமீபத்தில் உணவகம் ஒன்றில் தொழிலாளி ஒருவர் இட்லிகளை மிக வேகமாகவும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அதில் மனதை தொடும்படியான சில வார்த்தைகளை வரிகளாக எழுதி ட்வீட் செய்துள்ளார். தேதி குறிப்பிடப்படாத இந்த வீடியோவானது மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள பிரபலமான ஓம்சாந்தி கேட்டர்ஸில் படமாக்கப்பட்டதாகும்.
அந்த ட்வீட்டில் ஆனந்த் மஹிந்திரா “ஒருபுறம் உழைத்தும் மெதுவாகவும் இட்லிகளை சமைக்கும் ‘இட்லி-அம்மா’. மறுபுறம், இட்லிகளை அதிகப்படியாக தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெகுஜன உற்பத்திக்கான சில கருவிகள் உங்களிடம் உள்ளன ! ஆனால் எப்பொழுதும் இந்தியனாக இருக்கும் மனிதநேயத்தைத் தவறவிடாதீர்கள் : சில ‘இட்லி-காதலை’ பகிர்ந்து கொள்ள எடுக்கப்பட்ட சிறிய இடைவேளை…” என்று ‘இட்லி-அம்மா’ அவர்களின் வாழ்க்கையை முன்னிறுத்தி மனித நேயம் குறித்த அற்புதமான தகவலை பதிவிட்டிருந்தார்.
இதில் ‘இட்லி-அம்மா’ என ஆனந்த் மஹிந்திரா குறிப்பிடும் நபர், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டியை தான். இவர், உதவிக்கு யாரும் இல்லாமல் அவரே இட்லி, சட்னி, சாம்பார் தயாரித்து தனி ஆளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகின்றார். சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் ஏராளமானோர் தினமும் இந்த கடைக்கு வந்து சென்ற நிலையில் பாட்டி பிரபலமானதோடு சமூகவலைத்தளங்களிலும் வைரல் ஆனார். இதனை அறிந்த ஆனந்த் மஹிந்திரா 3 ஆண்டுகளுக்கு முன்னரே கமலாத்தாள் பாட்டிக்கு விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி,
ஆகியவற்றை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, 2022 இல் அவரது நிறுவனமான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனத்தின் உதவியுடன் கமலாத்தாள் பாட்டிக்கு ஒரு வீடும் கட்டித்தந்தார். தற்போது இட்லி தொடர்பான அவரது புதிய ட்வீட் வைரலாகி வருகிறது.
On the one hand you have ‘Idli-Amma’ who makes her Idlis laboriously & slowly. On the other, you have some tools of mass-manufacturing used to make Idlis at scale! But don’t miss the human touch that will ALWAYS be Indian: the short break taken to share some ‘idli-love’ with the… pic.twitter.com/uUu4Uj63PM
— anand mahindra (@anandmahindra) April 1, 2023
- பி.ஜேம்ஸ் லிசா









