இத்தாலி ஓபன் | ஜோகோவிச் தலையில் காயம்! இணையத்தில் வைரல் ஆகும் காட்சி!

இத்தாலி ஓபன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற ஜோகோவிச் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்த போது அவரது தலையில் தவறுதலாக ரசிகர் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் விழுந்ததில் ரத்தக்கட்டு ஏற்பட்டது.  இத்தாலிய ஓபனில் கொரெண்டின் மௌடெட்டிற்கு…

இத்தாலி ஓபன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற ஜோகோவிச் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்த போது அவரது தலையில் தவறுதலாக ரசிகர் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் விழுந்ததில் ரத்தக்கட்டு ஏற்பட்டது. 

இத்தாலிய ஓபனில் கொரெண்டின் மௌடெட்டிற்கு எதிராக அவர் 6-3 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனை அடுத்து ரசிகர்களுக்கு ஜோகோவிச் ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது உயரத்தில் நின்றுகொண்டிருந்த ரசிகர் ஒருவர் பையில் இருந்த தண்ணீர் பாட்டில் ஜோகோவிச் தலையில் எதேச்சையாக விழுந்தது. இதில் நிலைகுலைந்த ஜோகோவிச் தலையை பிடித்துக்கொண்டு அந்த இடத்திலேயே உட்காந்துவிட்டார். இதில் அவரது தலையில் சிறிது புடைப்பு ஏற்பட்டதோடு ரத்த கட்டும் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, மேலும் அந்த பாட்டில் தவறுதலாக அவரது பையில் இருந்து நழுவி ஜோகோவிச்சின் தலையில் விழுந்ததால் ரசிகர் வேண்டுமென்றே அதை செய்யவில்லை என்பதை காட்டுகிறது.
போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், “போட்டி முடிந்து சென்ட்ரல் கோர்ட்டை விட்டு வெளியேறிய நோவக் ஜோகோவிச் பார்வையாளர்களிடம் கையெழுத்து போடும் போது தண்ணீர் பாட்டில் விழுந்ததில் தலையில் அடிபட்டார். அவர் தகுந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு ஃபோரோவை விட்டு வெளியேறிவிட்டார். ” என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில், ஜோகோவிச் தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், என் நலம் குறித்து ஆவலுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி. நடந்தது ஒரு விபத்து. தற்போது நான் நலமாக உள்ளேன். காயத்திற்கு ஐஸ் பேக் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கிறேன். ஞாயிறு அன்று சந்திப்போம்.

இவ்வாறு ஜோகோவிச் தனது பதிவில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.