முக்கியச் செய்திகள் தமிழகம்

திரைப்படத்துறையில் புழங்கும் கருப்பு பணம்… ஐடி ரெய்டில் சிக்கிய பிரபல தயாரிப்பாளர்கள்

திரைத்துறையில் கொடி கட்டி பறக்கும் சினிமா தயாரிப்பாளர் ஜி.என்.அன்புச்செழியன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஆர். பிரபு என திரைத்துறையை ஆட்டி படைக்கும் நபர்களை குறிவைத்து தமிழகம் முழுவதும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகத்தில் தயாரிப்பாளர் அன்புச் செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. இதில் மதுரையில் அன்புச் செழியனுக்கு நெருக்கமான 30 இடங்களிலும், சென்னையில் அவரது அலுவலகம், வீடு மற்றும் அவருக்கு நெருக்கானவர்களின் இல்லங்கள் என 10 இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெறுகிறது என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏன் இந்த திடீர் சோதனை என கேட்டபோது, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில்  பல்வேறு திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் கோடி கணக்கில் பணத்தை கொட்டி படம் எடுத்துள்ளனர். இந்த திரைப்படங்களுக்கு செலவழிக்கப்பட்ட பணங்களுக்கு சரியான கணக்குகள் எதுவும் இல்லை. இவை பெரும்பாலும் கருப்பு பணம் என கூறப்படுகிறது. பல தயாரிப்பாளர்களுக்கு சினிமா பைனான்சியராக அன்புச் செழியன் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

இவரது பணத்தை டிஸ்ரிபியூட் செய்யும் பணியை அவரது சகோதரர் மேற்கொண்டு வந்துள்ளார். எனவே அவரது இல்லத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அன்புச் செழியன் மூலம் சினிமா தொழிலில் இறங்கியுள்ளனர். இவற்றில் பலரது முதலீடு கருப்பு பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு உள்ளதாக ஐடித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் பிரபல நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்தவர் அன்புச் செழியன் ஆவார். அந்த படத்தை எடுப்பதற்கு கருப்பு பணம் செலவழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அப்போது அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் காட்டதா ரூ.77 கோடியை பறிமுதல் செய்தது குறிப்பிடதக்கது.

தற்போது நடைபெறும் ஐடி ரெய்டிற்காக ரிசர்ச் விங் கடந்த சில மாதங்களாக முன் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தோம். இவர்களது பணம் எங்கெல்லாம் பதுக்கி வைக்கப்படுகிறது போன்ற தகவல்களை எல்லாம் ஏற்கனவே ஒரு முன் தயாரிப்பாக தயாரித்துள்ளோம். இவர்களிடம் பல பிரபல அரசியல் தலைவர்கள் முதலீடு செய்துள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அதற்குரிய ஆதராங்களை திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆண்டிப்பட்டியில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி

Arivazhagan Chinnasamy

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

Halley Karthik

இருக்குற உள்நாட்டு பிரச்சனைல இந்தி மொழியை சர்சை ஆக்காதீங்க… – பாடகர் சோனு நிகம்

EZHILARASAN D