அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு..!

தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு  மற்றும் இவருக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில்…

தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு  மற்றும் இவருக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 5 இடங்களிலும், திருவண்ணாமலை உள்ளிட்ட பிற பகுதிகளில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாகவும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதையும் படியுங்கள் : புதுமண தம்பதி வெட்டிக் கொலை – ஒருவர் கைது; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

அண்மையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் 5 நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருந்தது. இதில் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.