தொழில் அதிபர் சரவணன் நடிப்பில் வெளிவந்துள்ள தி லெஜெண்ட் திரைப்படம் 12 கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொழில் அதிபர் சரவணன் நடிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான தி லெஜெண்ட் திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. உலகம் முழுவதும் சுமார்2500 ஆயிரம் திரையரங்குகளில் தி லெஜெண்ட் திரைப்படம் ஆக்சன், காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் உள்ளிட்ட கதையைக் கொண்ட படமாக தி லெஜெண்டை படக்குழுவினர் உருவாக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை அடுத்த கட்ட நிலைக்குக் கொண்டு சென்றன.
இந்நிலையில், முதல் வாரத்தில் மட்டும் அதாவது முதல் 4 நாட்களில் மட்டும் தி லெஜெண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 6 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாகக் கூறப்பட்டது. முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் ரூ. 2 கோடி அளவுக்கு வசூலித்திருந்தது. இந்நிலையில், 12 கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகாமல் உள்ளதால், பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். இதற்கிடையே, தனது அடுத்த படத்தின் அறிவிப்பைச் சரவணன் எப்போது வெளியிடுவார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.








