நடிகர் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த்தார். அதில் அவர் தான் அரசியலுக்கு வர இருப்பதாகவும், வரவேண்டுமா வேண்டாமா என்று மக்கள் கூற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
திருச்சி கிழக்கு உள்ளிட்ட காலியக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டேன். நான் அரசியலுக்கு வரவில்லை என நினைக்க வேண்டாம். திருச்சி கிழக்கில்தான் போட்டியிடமாட்டேன் என்றேன்… வேறு எங்கும் போட்டியிடமாட்டேன் என்று கூறவில்லை.
திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவேண்டுமா? விஜய் சார் ஹீரோ ஆனதில் இருந்து போஸ்டர் ஒட்டிய ஒருவர் போட்டியிடவேண்டுமா? இல்லை கட்சி தொடங்கியதில் இருந்து உழைத்தவர்கள் நிற்க வேண்டுமா? என்பதை விஜய் சார் முடிவு செய்வார்” ஏன்று தெரிவித்துள்ளார்.




