கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்கச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்ப வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித் குமார். 25 வயதாகும் இவர் கிருஷ்ணகிரியில் தங்கி பழைய பேட்டையில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், அமித் குமார் நேற்று மாலை காட்டுநாயனப்பள்ளி முருகர் கோயிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்ட அவர், பிறகு கோவிலின் அருகே உள்ள மலைக்குச் உச்சிக்கு சென்று பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றார்.
அப்போது அங்கு வந்த குரங்குகள் கூட்டத்தைக் கண்டு அச்சப்பட்ட அவர், நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்தவர், பாறைகளின் இடுக்கில் சிக்கிக்கொண்டதால், மீண்டு வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். பின்னர் செய்வதறியாது, இன்று அதிகாலை,, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தனது செல்பேசி மூலமாக தகவல் தெரிவித்த அமித் குமாரை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூன்று மணி நேரம் போராடி, மீட்டனர்.
இதனையடுத்து மலை உச்சியில் இருந்து ஸ்ட்ரெக்சர் மூலம் கீழே கொண்டுவரப்பட்ட அவர், தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்கச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்ப வந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







