அரசு திட்டங்களால் உயர்ந்த இடத்தை மாணவர்கள் அடைவது பெருமையாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்க சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொகுதிக்கு உட்பட்ட ஜவஹர் நகர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு, அரவை இயந்திரம், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், மாணவர்களுக்கு புத்தகப் பை, நோட்டு, பேனா, தண்ணீர் பாட்டில் அடங்கிய தொகுப்பையும் வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதைதொடர்ந்து கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார்.
இதில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்கே நான் முதலமைச்சராக இருந்தாலும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு நான் எம்.எல்.ஏ.,தான். என்றும், எவ்வளவு பணி இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் புது உற்சாகம் பிறக்கிறது என்றும் கூறினார்.
பெண்கள் கல்வி கற்க எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக, தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் திட்டம், இலவச பஸ் பாஸ் என பெண் கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். அரசின் திட்டங்கள் மூலம் மாணவர்கள் உயர்ந்த இடத்தை அடைவது எனக்கு பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.