“முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பல முதலீடுகளை ஈர்த்துள்ளது” – திமுக எம்.பி. #KanimozhiKarunanidhi

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் பல முதலீடுகளை ஈர்த்து வருவது நிதர்சனமான உண்மை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சிவகங்கையை அடுத்த ஒக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட திமுக மகளிரணிசெயலாளர் பவானி கணேசன்.…

"It is a fact that Chief Minister M.K.Stal's foreign trip is attracting many investments" - DMK MP. #Kanimozhi

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் பல முதலீடுகளை ஈர்த்து வருவது நிதர்சனமான உண்மை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கையை அடுத்த ஒக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட திமுக மகளிரணி
செயலாளர் பவானி கணேசன். இவரின் இல்ல திருமணவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி கனிமொழி கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் முதலீடுகளை ஈர்க்கவில்லை என் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த திமுக எம்.பி கனிமொழி கூறியதாவது, “நிறைவேறாத கனவுகளுடன் இருப்பவர்களின் காழ்ப்புணர்ச்சியில் வரும் பேச்சுதான் அது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் பல முதலீடுகளை ஈர்த்து வருவது நிதர்சனமான உண்மை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றது முதல் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.”

இவ்வாறு திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.