ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரம் – முதல் கட்டமாக நீண்ட கால சிறை விடுப்பு வழங்க மஜக கோரிக்கை

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் முதல் கட்டமாக நீண்ட கால சிறை விடுப்பு வழங்க மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளார் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மனித நேய ஜனநாயக…

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் முதல் கட்டமாக நீண்ட கால சிறை விடுப்பு வழங்க மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளார் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.  இதில் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர் தியாகு ஆகியோர் பத்திரிக்கையாளர்களை  சந்தித்தனர்.

20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி அண்ணா பிறந்த நாளையொட்டி முன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் பாராபட்சம் காட்டப்பட்டது குறித்தும் , சமூக வழக்கு தொடர்புடைய வழக்குகளில் குறிப்பிடப்படுபவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்தும் இருவரும் தங்கள் வலியை வெளிப்படுத்தினர்.

இவ்வழக்கு தொடர்பில் தமிழக அரசு 16 1வது சட்டப் பிரிவை பயன்படுத்தி அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும், இதை ஆளுநர் நிராகரித்தால் உச்சநீதிமன்றம் சென்று வாதாடி வெல்ல இது உதவும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் இவ்வழக்கில் அதீத சிக்கல் உள்ளவர்களுக்காக தமிழக அரசு CRPC 435 சட்டப்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும், அவர்கள் மறுக்கும் போது, அதுவும் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த உதவும் என்றும் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தினர்.  இது தொடர்பான வழக்குகள் முடியும் வரை 20 ஆண்டுகளை கடந்த அனைத்து சிறைவாசிகளுக்கு நீண்ட கால சிறை விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி  சேலத்தில் மத்திய சிறைக்கு முன்பாக செப்டம்பர் 27 அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.