ராணுவ விமானத்திலிருந்து விழுந்து ஆப்கானியர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். அந்த சமயத்தில் அமெரிக்கா தனது நாட்டினரை அங்கிருந்து மீட்டு கொண்டு செல்வதற்காக அமெரிக்கா விமானப் படையின் C17 குளொப்மாஸ்டர் விமானத்தை காபுல் விமான நிலையத்தில் நிறுத்தியிருந்தது.
விமானம் அமெரிக்கர்களை ஏற்றிக்கொண்டு புறப்படத்தயாரனபோது அதன் டயர் பகுதி மற்றும் இறக்கைகளில் தொங்கியபடி ஆப்கானியர்கள் பயணம் செய்தனர். அப்போது விமானம் வானில் பறந்தபோது இறக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பேர் அங்கிருந்து கீழே விழுந்தது பலியாகினர்.
அந்த விமானம் கத்தாரின் “உதெட்” விமான தளத்தை அடைந்த போது மனித உடல்களின் சில பகுதிகள் டயர் பகுதியில் ஒட்டி இருந்துள்ளன. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு அமெரிக்க விமானப்படை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க விமானப்படையின் சிறப்பு விசாரணைக் குழு இந்த விவகாரத்தில் விசாரிக்க தொடங்கியுள்ளது.








