குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சார்பதிவாளர், வேலைவாய்ப்பு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட குரூப் 2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை…

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சார்பதிவாளர், வேலைவாய்ப்பு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட குரூப் 2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்ப முதல்நிலைத் தேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது.

9.94 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

உத்தேச விடைக்குறிப்பில் ஏதும் ஆட்சேபனைகள் இருப்பின், அடுத்த ஒரு வார காலத்துக்குள் தேர்வாணைய இணையளத்தில் அதை பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ள TNPSC, தேர்வர்களின் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு, ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.