வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.
தேசிய லோக் தள் கட்சியின் தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் செளதாலா மீது 1993ம் ஆண்டு 2006ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதுதொடர்பாக விசாரணையில் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ரூ.6.09 கோடி மதிப்பிலான சொத்துகள் வருமானத்துக்கும் அதிகமான ஓம் பிரகாஷ் செளதாலா சேர்த்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி விகாஸ் துல், கடந்த 21ம் தேதி இவரை குற்றவாளியாக அறிவித்தார். இந்நிலையில், அவருக்கு இன்று 4 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு சொந்தமான 4 சொத்துகளை பறிமுதல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார். செளதாலாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தண்டனையை குறைத்து வழங்குமாறு அவரது தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எனினும், சிபிஐ தரப்பில் அதிகபட்ச தண்டனையை அவருக்கு வழங்குமாறு வாதம் முன்வைக்கப்பட்டது.