டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் அனுப்பப்படும்: இஸ்ரோ மையம்!

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் 14 ஆயிரம் கன லிட்டர் ஆக்சிஜன் சென்னைக்கு அனுப்பப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு…

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் 14 ஆயிரம் கன லிட்டர் ஆக்சிஜன் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள இஸ்ரோ மையத்தில் தயாரிக்கப்படும் மருத்துவ ஆக்சிஜன், டேங்கர் லாரி மூலம் சென்னையில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில், அந்த நிறுவனத்தினர், சென்னையில் உள்ள பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.

இந்த டேங்கர் லாரியில் 17 ஆயிரம் டன் எடை கொண்ட 14 ஆயிரம் கன லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. இனி வாரத்திற்கு ஒரு முறை இங்கிருந்து ஒரு டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.