காஸா மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் குற்றச்சாட்டு!

காஸா மீது  பாஸ்பரஸ் குண்டுகளால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக பாலஸ்தீனம் குற்றம்சாட்டியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேல் வீரர்கள் காசாவை நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ளனர். காஸா அனைத்து பக்கங்களிலும் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.  இஸ்ரேலின்…

காஸா மீது  பாஸ்பரஸ் குண்டுகளால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக பாலஸ்தீனம் குற்றம்சாட்டியுள்ளது.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேல் வீரர்கள் காசாவை நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ளனர். காஸா அனைத்து பக்கங்களிலும் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.  இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கும்,  குண்டு மழை பொழிவதற்கும் மத்தியில் பாலஸ்தீனியர்கள் காஸா பகுதியில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியேறி வருகின்றனர்.

10 முதல் 12 மணி நேரம் வரை கூட தாக்குப்பிடிக்க முடியாத 3 லட்சம் லிட்டர் மட்டுமே டீசல் உள்ளது.  அதன் பிறகு அங்கே இருள் சூழ்ந்துவிடும்.  ஒருவேளை இதற்காகத்தான் இஸ்ரேலிய ராணுவம் காத்திருக்கிறது போல தோன்றுகிறது.  எது எப்படியோ, காஸாவை நரகமாக மாற்றிவிட்டது இஸ்ரேலிய ராணுவம். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவப் பிரிவான அல் காசிமின் கமாண்டர் முகமது ஜெயிப்பின் வீடு அழிக்கப்பட்டுள்ளது.

கமாண்டர் முகமது ஜெய்ஃப் குண்டுவெடிப்பில் இருந்து சிறிது நேரத்தில் தப்பினார். ஆனால் அவரது சகோதரர் மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.  பாலஸ்தீனம் பாஸ்பரஸ் குண்டுகளால் குடியிருப்புப் பகுதிகளைத் தாக்குவதாகக் கூட குற்றம்சாட்டுகிறது.

இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.  2500-க்கும் மேற்பட்டோரின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

20 மைல் நீளமும் 9 மைல் அகலமும் கொண்ட காஸாவை 20 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வாழும் நகரத்தை  இடிபாடுகளின் குவியலாக மாற்றத் தொடங்கியுள்ளன. தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக, ஹமாஸ் தனது இராணுவ தளங்களை மக்கள் வாழும் கட்டிடங்களில் நிறுவியுள்ளது. எனவே தற்போது இந்த கட்டிடங்களையும் இஸ்ரேல் குறிவைத்துள்ளது.

பாலஸ்தீனியர்கள் காஸாவை காலி செய்து எகிப்துக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில், எகிப்திய வாகனங்கள் காஸாவிற்கு டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு ரஃபா நில எல்லையை அடைந்தன.  ஆனால் காஸாவை முற்றுகையிட்ட இஸ்ரேல் அவர்கள் மீது குண்டுகளை வீசி அவர்களைத் திரும்பிப் போகச் செய்தன.  எகிப்து செல்ல முயன்ற பாலஸ்தீனியர்களிடையே பீதி ஏற்பட்டது. காசா துறைமுகத்தை அழித்ததன் மூலம்,  கடல் வழியாக செல்லும் உதவிகளை இஸ்ரேல் தடுத்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் காஸா பகுதியின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் மின்விளக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதுவும் விரைவில் நிறுத்தப்படும்.  காஸாவிற்கான மின் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது.  அதனால் வெளியில் இருந்து உதவி கிடைக்கவில்லை.  அதன் மின் உற்பத்தி நிலையத்திலும் எரிபொருள் தீர்ந்து விட்டது.

காசாவில் இருக்கும் பத்திரிகையாளர் ஹசன் ஜாபர்,  அங்கு பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை என்று கூறினார்.  இஸ்ரேலிய குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, பல ஹோட்டல்கள், ஊடக அலுவலகங்கள் மற்றும் அமைச்சர்களின் பங்களாக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 3 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.  குண்டுவெடிப்புகளில் இடிந்த கட்டிடங்களில் புதையுண்ட மக்களை வெளியேற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாஸ்பரஸ் குண்டுகளால் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் தற்போது பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் காசா மீது தாக்குதல் நடத்துவதாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.  மேலும் பாஸ்பரஸ் ரக வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.  பாஸ்பரஸ் குண்டு மிகவும் ஆபத்தானது.  இந்த வெடிகுண்டு எங்கு விழுந்தாலும், அது ஆக்ஸிஜனை வேகமாக உறிஞ்சி எரியத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில்,  அதன் தீயால் எரிக்கப்படாதவர்கள், மூச்சுத்திணறல் காரணமாக இறக்கின்றனர்.

அது முற்றிலும் அழியும் வரை எரிந்து கொண்டே இருக்கும்.  தண்ணீர் ஊற்றினாலும், அது எளிதில் அணையாது,  மாறாக புகை மேகமாக எரியத் தொடங்குகிறது.  இது வெள்ளை பாஸ்பரஸ் மற்றும் ரப்பர் கலந்து தயாரிக்கப்படுகிறது.  பாஸ்பரஸ் ஒரு மெழுகு போன்ற ரசாயனமாகும்.  இது வெளிர் மஞ்சள் அல்லது நிறமற்றது.  இது அழுகிய பூண்டு போன்ற கடுமையான துர்நாற்றத்தையும் வெளிவிடுகிறது.  இந்த ரசாயனப் பொருளின் சிறப்பு என்னவென்றால்,  ஆக்சிஜனுடன் முழு தொடர்பு கொண்டு  தீப்பிடிக்கும். அதை எளிதில் அணைக்க முடியாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.