கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தன்னைத் தானே தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் எம்.பி.சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா நகை கடை இயங்கி வருகிறது. இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்கத்தின் நகர தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் எம்.பி.சுரேஷ் இன்று அதிகாலை தனது அறையில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் எம்.பி.சுரேஷின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிருஷ்ணகிரியில் உள்ள வணிகர் சங்க கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.







