முக்கியச் செய்திகள் உலகம்

பெகாசஸ் உளவு விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் விசாரணையை தொடங்கியது

பெகாசஸ் உளவு மென்பொருளை சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்த என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் அரசு விசாரணையைத் தொடங்கி உள்ளது.

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றன. நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க அனுமதிக்கக்கோரி காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் கடந்த 9 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அமளி தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் அரசு விசாரணையைத் தொடங்கி உள்ளது. இஸ்ரேலில் உள்ள என்எஸ்ஓ குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் அரசு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அரசின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள், என்எஸ்ஓ அலுவலகங்களில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது என்எஸ்ஓ மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. இது குறித்துப் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், :”இந்த தருணத்தில் இது குறித்து விளக்கமாக கூறமுடியாது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. என்எஸ்ஓவின் பெகாசஸ் மென்பொருள் தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யும் என்றார்.

 

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஏற்றுமதி கட்டுப்பாடு பிரிவு அதிகாரிகள்தான் இந்த சோதனையை மேற்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு என்எஸ்ஓ செயல்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இஸ்ரேலின் மொசாட் உளவு முகமையின் முன்னாள் துணை தலைவரும் தற்போதைய கென்செட் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் தலைவருமான ராம்பென் பாராக் இது குறித்துக் கூறுகையில் , “பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து பாதுகாப்புத்துறை அமைத்துள்ள ஆய்வுக்குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குழுவின் விசாரணை அடிப்படையில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

இதனிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுக்கு எதிராக பெகாசஸ் உளவு மென்பொருள் உபயோகிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கான்ட்ஸ் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாடு குறித்து இஸ்ரேல் விசாரணை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் என்எஸ்ஓவின் தலைமை நிர்வாகி சாலெவ் ஹூலியோ, இது போன்ற விசாரணையின் வாயிலாக எங்கள் நிறுவனம் குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது தெரியவரும் என்றார்.

Advertisement:
SHARE

Related posts

ஹெலிகாப்டர் விபத்து: முதலமைச்சர் மரியாதை

Halley Karthik

தமிழ்நாட்டிற்கு 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியது மத்திய அரசு

Ezhilarasan

இலங்கைக்கு நிவாரணம்; மத்திய அரசிடம் அனுமதி கோரி தீர்மானம்

Arivazhagan CM