முக்கியச் செய்திகள் உலகம்

கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler

கொரோனா தொற்றை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் Inhaler இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இஸ்ரேலை சேர்ந்த பேராசிரியரான நட்ரி அபெர் என்பவர் கொரோனாவைக் குணப்படுத்தும் Inhaler ஒன்றை தயாரித்துள்ளார்.

இது கொரோனாவை ஐந்தே நாட்களில் குணப்படுத்தும் திறன் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனை 30 நோயாளிகளிடம் பரிசோதனை செய்ததில் 29 பேர் தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட இந்த Inhaler-ஐ ஒரு முறை மட்டும் பயன்படுத்தினால் கூட போதுமானது என கூறுகின்றனர்.

இதற்கான உரிய அனுமதி பெற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Advertisement:
SHARE

Related posts

நெதர்லாந்திடம் இந்திய மகளிர் ஹாக்கி அணி படுதோல்வி

Halley karthi

நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசு நல்ல முடிவு எடுக்கும்: உதயநிதி நம்பிக்கை

Gayathri Venkatesan

புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்கலாம்!

Vandhana

Leave a Reply