கொரோனா சுகாதார நடவடிக்கைகளால் புற்றுநோய் ஏற்படுமா?

கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட சில பழக்க வழக்கங்களை நான் தினமும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டோம். அந்தவகையில் கொரோனா தொடர்பாகவே மக்கள்…

கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட சில பழக்க வழக்கங்களை நான் தினமும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டோம். அந்தவகையில் கொரோனா தொடர்பாகவே மக்கள் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

அதிலும் முகக்கவசம் அணிவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை அதிகம் தேடியுள்ளனர். முகக்கவசம் அணிவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு புற்றுநோய் ஏற்படும் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பரவியது. புற்றுநோய் ஏற்படுவதற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது போன்ற சந்தேகங்களை தீர்த்து கொள்ளவே மக்கள் இதனை அதிகம் தேடியுள்ளனர்.

அதன்பிறகு Infrared thermometers குறித்து அதிகம் தேடியுள்ளனர். இதனை பயன்படுத்துவதால் உங்கள் நரம்புகள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சில தகவல் பரவியது. ஆனால் இந்த தெர்மோமீட்டரால் எந்த பாதிப்பும் இருக்காது என சில ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இதற்கு அடுத்தபடியாக சானிடைசர் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படுமா? என்பது குறித்து இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர். இதற்கு சமூக வலைதள பதிவுகளே காரணம். சானிடைசரால் தோல் பாதிப்புகள் ஏற்பட்டு புற்றுநோய் ஏற்படும் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை. இப்படி கொரோனா சுகாதார நடவடிக்கைகளால் புற்றுநோய் ஏற்படுமா? இல்லையா? என்பதே மக்களின் சந்தேகமாக இருந்துள்ளது.

ஆங்கிலத்தில்: Nabeela Khan https://www.ha-asia.com/

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply