முக்கியச் செய்திகள் விளையாட்டு

மும்பையில் இன்று தொடங்குகிறது 2-வது டெஸ்ட்

நியூசிலாந்து அணியுடனான 2 வது டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்கு கிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்றுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. இதில் இந்திய அணி, வெற்றி பெற வேண்டிய நிலையில் நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது.

இதையடுத்து 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மும்பையில் இன்று தொடங்க இருக்கிறது. முதலாவது டெஸ்டில் ஓய்வ்ளிக்கப்பட்ட விராத் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். அவர் வருகையால் அணியில் இருந்து நீக்கப்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கான்பூர் டெஸ்ட் போட்டியின் போது அவர் இடத்தில் அறிமுக வீரராக இடம் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்து அசத்தினார். அதனால் அவரை நீக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொடக்க ஆட்டக்கார மயங்க் அகர்வால் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

அனுபவ வீரர்களான் ரஹானே, புஜாரா ஆகியோர் தொடர்ந்து ரன் எடுக்க தடுமாறி வருகிறார்கள். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. அதற்கு பதிலடிக்கும் கொடுக்கும் விதமாக நியூசிலாந்து அணியும் பலம் வாய்ந்தது என்பதால் இந்த டெஸ்ட் தொடர் பரபரப்பாக இருக்கும்.

Advertisement:
SHARE

Related posts

‘கொரோனா பெரிய எதிரி, அதை வீழ்த்தும் ஆயுதம் தடுப்பூசிதான்’: பிரதமர் பேச்சின் முழு விவரம்!

Halley Karthik

வீரபாண்டி ராஜா மறைவுக்கு பாமக நிறுவனர் இரங்கல்

Halley Karthik

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

Gayathri Venkatesan