தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சைக்கு 4 அல்லது 5 நாட்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு, புதுப்பேட்டை, கொய்யாதோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பொதுமக்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கேட்ட குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணியில் உள்ளது என தெரிவித்த குஷ்பு, தேவையில்லாமல் குழப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை தான் முடிவு செய்யும் எனவும், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சைக்கு 4 அல்லது 5 நாட்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் குஷ்பு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய குஷ்பு சட்டமன்ற தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்