அமெரிக்காவில் வசிக்கும் 45 வயதான இந்திய தம்பதி, மற்றவர்களிடம் இருந்து சற்றே மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் 4 சுவர்களுக்குள் அடைந்து கிடக்கவில்லை. இருவரும் ஒன்றாக இணைந்து உலகத்தையே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 170 நாடுகளுக்கு உற்சாக பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்கள் வேலையையும் ராஜினாமா செய்யாமல் இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவதுதான்.
இந்தியாவை சேர்ந்த பிரசன்னா வீராசாமி, சங்கீதா ரங்கநாத் தம்பதிக்கு 1998ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு பணிக்காக இருவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளனர். வீட்டிலேயே அடைந்திருந்த அவர்களுக்கு உலகத்தை வலம் வர வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இணையத்தில் சுற்றுலா தொடர்பாக வரும் விளம்பரங்களாலும் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளனர். அதனால் ஒவ்வொரு நாடாக தங்கள் காதல் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பயணம் ஒருபுறம் இருந்தாலும், தங்கள் பணியையும் சரிவர செய்து முடித்து விடுகின்றனர். அவர்கள் பணிபுரியும் நிர்வாகமும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக நன்றி தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10 பயணங்கள் வரை மேற்கொள்ள முடிவதாக கூறியுள்ளனர். இறுதியாக பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். தங்கள் நாட்டிற்கு மிக அருகில் வந்து சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் பேசியுள்ளனர்.