அர்ஜுன் மகள் திருமணம் செய்துகொள்ளப் போகும் நபர் இவர்தானா..?

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா  பிரபல குணச்சித்திர நடிகரின் மகனை  திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னெந்திய மொழிகளில் ஆக்‌ஷன் ஹீரோவாக தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் அர்ஜுன். இயக்குனர் சங்கர் இயக்கத்தில்…

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா  பிரபல குணச்சித்திர நடிகரின் மகனை  திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்னெந்திய மொழிகளில் ஆக்‌ஷன் ஹீரோவாக தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் அர்ஜுன். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த ஜென்டில்மேன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டமான வெற்றியை தந்து அர்ஜுனுக்கு சினிமாவில் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

சில வருடங்களாக ஹீரோவாக நடித்த படங்கள் வசூலில் மந்தம் காட்டிய நிலையில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்தார். அந்த வகையில் நடிகர் அஜித் நடித்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அர்ஜுன் நடித்ததின் மூலம் நல்ல கம்பேக்கை கொடுத்ததாக சினிமா ரசிகர்களால் அர்ஜுன் பாராட்டப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நெகடிவ் கதாபாத்திரங்களில் அவர் கவனம் செலுத்த துவங்கினார். விசாலுடன் அர்ஜுன் நடித்த இரும்புத்திரை படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அர்ஜுனுக்கு அஞ்சனா மற்றும் ஐஸ்வர்யா என இரண்டு மகள் உள்ளனர்.

மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் விஷாலுடன் “பட்டத்து யானை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு சொல்லிவிடவா எனும் படத்திலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழ் திரையுலகில் ஐஸ்வர்யா திருமணப் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களின் மூலம் நன்கு அறியப்பட்ட இயக்குனர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி சேரன் இயக்கி நடித்த திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில்  இவர்களின் திருமணத்திற்கு  இருவரின் வீட்டாரும் சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து இரு வீட்டாரும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.