’ஆதிபுருஷ்’ திரைப்படத்தை கலாய்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்!

ஆதிபுருஷ்’ திரைப்படம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. வால்மீகி ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம்…

ஆதிபுருஷ்’ திரைப்படம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

வால்மீகி ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் பேன் இந்தியா மூவியாக கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சை கிளம்பியதோடு, நேபாளத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத், திரையரங்குகளில் ஹனுமனுக்காக ஒரு இருக்கையை ஒதுக்க வேண்டும் எனக் கூறியதும் சர்ச்சையானது.

இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் இணைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சேவக், ‘ஆதிபுருஷ் பார்த்த பிறகுதான் எனக்கு புரிந்தது, ஏன் ‘பாகுபலியை’ கட்டப்பா கொன்றார் என்று’ என தெரிவித்துள்ளார். சேவாக்கின் இந்த கருத்துக்கு பிரபாஸ் ரசிகர்கள் பலரும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

’ஆதிபுருஷ்’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் சேர்த்து உலக அளவில் ரூ.340 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தொடர் எதிர்மறை விமர்சனங்களால் விடுமுறை நாட்களுக்குப் பிறகு படத்தின் வசூல் கடுமையாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.