7ஜி ரெயின்போகாலனி – 2ல் இணையும் மலையாள நடிகை இவர்தானா..?

7ஜி ரயின்போ காலனி படத்தில் பல நடிகைகள் நடிக்க உள்ளதாக பேசப்பட்ட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள்து படக்குழு. கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகன் இயக்கத்தில் வெளியானது 7ஜி ரெயின்போ காலனி. இந்த…

7ஜி ரயின்போ காலனி படத்தில் பல நடிகைகள் நடிக்க உள்ளதாக பேசப்பட்ட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள்து படக்குழு.

கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகன் இயக்கத்தில் வெளியானது 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் இசையில் 10 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கண் பேசும் வார்த்தைகள், நினைத்து நினைத்து பார்த்தால் உள்ளிட்டபாடல்கள் வெளியாகி சூப்ப்ர் ஹிட் அடித்தன.

ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க இயக்குநர் செல்வராகவன் திட்டமிட்டுள்ளார். கதை, திரைக்கதை பணிகள் முடிந்துள்ளதால் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்பாகத்திலும் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நடிக்க அதிதி ஷங்கர் மற்றும் இவானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கதநாயகியாக பலர் நடிக்க உள்ளதாக பேசி வந்த நிலையில் ராங்கி படத்தில் நடித்த மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனஸ்வர ராஜன் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரம், கல்லூரி மாணவி உள்ளிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் அனஸ்வர ராஜன் தமிழில் கதாநாயகியாக நடிக்க உள்ள நிலையில் சோனியா அகர்வாலைப் போலவே இந்த கதாபாத்திரமும் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.