”தேசிய நல்லாசிரியர் விருது மகிழ்ச்சியளிக்கிறது” – அலங்காநல்லூர் ஆசிரியர் எட்வின் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

தேசிய நல்லாசிரியர் விருது மகிழ்ச்சியளிக்கிறது என மதுரை அலங்காநல்லூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்…

தேசிய நல்லாசிரியர் விருது மகிழ்ச்சியளிக்கிறது என மதுரை அலங்காநல்லூர் அரசு
பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி
ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த காட்வின்
வேதநாயகம் ராஜ்குமார். இவர் இப்பள்ளியில் 18 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராகவும், NCC ஆசிரியராகவும் பணியை செய்து வருகிறார்

பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய அளவில், கூடைப்பந்து போட்டி, டேக் வாண்டோ,
குவாஷ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பரிசுகளை மாணவர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கு மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து ஆசிரியர் காட்வின் தெரிவித்துள்ளதாவது..

மத்திய அரசு விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  முதல் முறை உடற்கல்வி ஆசிரியருக்கு விருது வழங்கி உள்ளது மகிழ்ச்சயாக உள்ளது.  இந்த விருதினை இறைவனுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமர்பிப்பிக்கிறேன். மேலும் என்னிடம் வரும் மாணவர்களின் விளையாட்டு திறமையை அறிந்து ஊக்கமளித்து
அவர்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என  காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் தெரிவித்தார்.

ஆசிரியர் காட்வின் வேதநாயகத்திற்கு சக ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.