இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும்-ராதிகா மெர்ச்சன்ட்க்கும் நேற்று வெகு விமரிசையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்தியாவில் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவர் உலக பணக்காரர் பட்டியலில் 9வது இடத்திலும், இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திலும் உள்ளார். முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, என்ற இரு மகன்களும், இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் எரிசக்தி நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தற்போது என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்ச்சன்ட், ஷாலியா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ஆவார்.இந்நிலையில் இவரது 2வது மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் இருவருக்கும் குஜராத்தி சடங்குகளின் படி நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், நிச்சயதார்த்தம் செய்யும் தம்பதிக்கு நீதா அம்பானி மிகப்பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தார். யாரும் எதிர்பாராத வகையில், அம்பானி தனது குடும்பத்தினருடன் மேடையேறி மிக அழகாக நடனமாடி மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்லியது, மணமக்களையும், விருந்தினர்களையும் ஆனந்தக் கடலில் ஆழ்த்தியது
இந்த நிச்சயதார்த்த விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் வருகை தந்திருந்தார். மேலும் பாலிவுட் நடிகர்கள், சல்மான் கான், ரன்வீர் சிங், அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.