சமீபத்தில், ஒரு ஹோட்டல் மெனுவில் ஜிலேபியை ஆர்டர் செய்து சாப்பிட்ட ஒரு மொழிபெயர்ப்பாளர் . அந்த ‘ஜிலேபி’ யின் ருசி குறித்து அவர் விளக்கிய வார்த்தைகள் மற்றும் அந்த ஹோட்டல் மெனுவில் போட்டிருந்த விளக்கம் வைரலாகி பலரையும் மகிழ்வித்துள்ளது.
ஜிலேபி இந்திய துணைக்கண்டத்தில் மிகவும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள இனிப்பு பிரியர்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். பொதுவாக ஜிலேபி என்பது ஜாங்கிரியின் சிறிய வடிவம் என்று பலரும் நினைப்பது உண்டு. ஆனால் ஜிலேபி சுவையில் ஜாங்கிரியை விட சற்று மாறுபட்டது. காரணம், ஜாங்கிரி உண்ண மிகவும் மிருதுவாக இருக்கும் ஆனால், ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக இந்த இனிப்பானது மைதா மாவு, கார்ன் மாவு, தயிர் மற்றும் நெய் சேர்த்து, அதனுடன் புட் கலர் கலந்து, தண்ணீர் ஊற்றி நன்றாக மாவினை கரைத்து, பின்னர் கரைத்த அந்த மாவினை 8 முதல் 12 மணிநேரம் வரை புளிக்க வைத்து. அதன் பிறகு சரியான பதத்தில் சுழல் வடிவத்தில் அழகாக வறுத்து , பின்னர் அதனை சர்க்கரை பாகில் ஊற வைப்பதன் மூலம் ‘நா’ தித்திக்கும் உணவாக உருவாகிறது.
இப்படிபட்ட ஜிலேபியின் தோற்றம் மற்றும் சுவை எப்படி இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், அதைப் பற்றி தெரியாத ஒருவருக்கு நீங்கள் அதை எப்படி விவரிப்பீர்கள்? அந்த வகையில் சமீபத்தில், ஒரு உணவக மெனுவில் ஜிலேபி பற்றிய விளக்கம் வைரலாகி பலரையும் மகிழ்வித்துள்ளது.
டெய்சி ராக்வெல் என்கிற மொழிபெயர்ப்பாளர், சமீபத்தில் ஒரு பாகிஸ்தானிய உணவகத்தின் மெனுவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் “ஜிலேபியின் இறுதி விளக்கம்” என்று கூறி இருந்தார். அதாவது ஜிலேபியை விவரிக்கும் அந்த மெனுவை ட்வீட் செய்து “ரோஸ் வாட்டர் சிரப்பில் ஊறவைக்கப்பட்ட மிருதுவான ப்ரீட்சல் வடிவ வறுத்த அப்பளம்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் “நண்பர்களே, @microMAF மற்றும் நானும் ஜிலேபியின் இறுதி விளக்கத்தைக் கண்டோம்!” என்று ருசியில் மயங்கிய வரிகளாக அந்த ட்விட்டை பகிர்ந்திருந்தார். இந்த பதிவு பகிரப்பட்ட சில நாட்களிலேயே, வைரல் ஆனதோடு ஆயிரக்கணக்கானோர் அதனை லைக் செய்து தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா