19 வது ஐபிஎல் தொடர் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈட்பட்டுள்ளன. இந்த சூழலில் ஐபிஎலின் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியை ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா, போல்ட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் இணைந்து ரூ.16,700 கோடிக்கு வாங்கியுள்ளன.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியாக, பெங்களூரு அணி உருவெடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் பெயர் மாற்றப்பட உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வலம் வந்து கொண்டுள்ளன.
இந்த நிலையில் பெயர் மாற்றம் தொடர்பான வதந்திகளுக்கு ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கிய நபரான அனன்யா பிர்லா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரியில் ”ஆதித்யா பிர்லா குழுமம், டேவிட் பிளிட்சர் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு RCB-யைக் கையகப்படுத்தியுள்ளது. மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், “Royal Challengers Bengaluru” என்ற பெயர் மாற்றப்படாமல் அப்படியே தொடரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி பெங்களூரு அணி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








