முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் வாகனம்

வரலாற்றில் புது அத்தியாயம் படைக்கிறதா ராயல் என்ஃபீல்டு?

பழசு என்றும் புதுசு என்பார்கள். அது போல் ஒருகாலத்தில் இந்திய சாலைகளில் அதிகம் வலம் வந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விற்பனையில் புதிய வரலாறே படைத்து வருகிறது. அது குறித்த செய்தியை பார்க்கலாம்.

பெயர் சொன்னாலே போதும் அதிகமாக விற்பனையாகும் என்ற பெயரை கொண்டது ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம். ஒரு காலத்தில் இந்திய சாலைகளில் அதிகம் வந்த வலம் வந்த மோட்டார் சைக்கிளாகவும் ராயல் என்பீல்டு இருந்தது. 1990ம் ஆண்டுகளுக்கு பிறகு புதிய மோட்டார் சைக்கிள் நிறுவனங்களின் வருகையால் ராயல் என்பீல்டு விற்பனையில் பின் வரிசைக்கு சென்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹீரோ, டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா நிறுவனங்களின் பைக், ஸ்கூட்டர்கள் இந்திய இருசக்கர வாகன சந்தையை காலபோக்கில் ஆக்கிரமித்தன. ஆனாலும் ராயல் என்பீல்ட் புல்லட்கள் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தன. தேவைப்படுவோர் தேடி வாங்கும் மோட்டார் சைக்கிளாக அது இருந்தது.

சமீப ஆண்டுகளாக ராயல் என்பீல்டு புல்லட் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வடிவமைப்பில் மாற்றங்களை புகுத்தி புதிய வகை மோட்டார் சைக்கிள்களை வெளியிட்டது. ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்த Hunter 350 பைக் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த பைக்கின் விலை சற்று குறைவாக இருப்பதால் பலரும் இதை வாங்க முன்வருகின்றனர். கையாள்வதற்கு எளிதாகவும், குறைந்த எடையுடனும் இருப்பதாக கூறப்படுகிறது. வாகனம் தேவை என 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் பைக்குகளில் Hunter 350 மூன்றாவது இடத்தில் உள்ளது என நிறுவனம் தெரிவிக்கிறது.

தற்போது மாதம் ஒன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் பைக்குகள் விற்பனையாகிறது. அக்டோபர் மாதம் 82 ஆயிரத்து 235 வாகனங்கள் விற்பனையானது. நடப்பு 2022-23ம் நிதியாண்டின் இறுதியில் 8 லட்சத்து 80,000 வாகனங்களை விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -22 ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 47 சதவிகிதம் விற்பனை அதிகம்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை உயர்ந்துள்ளது. அடுத்த நிதியாண்டு 2023 -24 ல் மாதம் ஒன்றிற்கு சுமார் ஒரு லட்சம் பைக்குகள், ஓராண்டில் மொத்த விற்பனை ஒரு மில்லியனை தாண்டும் என்றும் கணித்துள்ளது. சில ஆண்டுகளாக மூலப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பால் ராயல் என்ஃபீல்டு வாகனங்களின் விற்பனை மந்தமாக இருந்தது. குருகிராமில் உள்ள உற்பத்தி ஆலையை விரிவுப்படுத்தி உள்ளது. அதற்கு ஏற்ப விற்பனையாளர்களை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இன்றைய 2k கிட்ஸ்கள் விரும்பும் டியூக், பல்சர், அப்பாச்சி, ஆர்15, ஹார்நெட், எக்ஸ்ட்ரீம் 200எஸ், ஆகிய பைக்குகளின் வரிசையில் ராயல் என்பீல்டின் Hunter 350 பைக்கும் சேர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீண்டும் பொது நுழைவுத் தேர்வு – யுஜிசி உத்தரவு

Janani

’கோப்ரா’ படத்தின் சென்சார் விவரங்களுடன் கூடிய சுவார்ஸ்ய தகவல்கள்

EZHILARASAN D

தமிழ்நாட்டிற்கு 3.5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியது மத்திய அரசு

EZHILARASAN D