மெட் காலா 2023 நிகழ்ச்சியில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் வைர நெக்லெஸ்ஸின் விலை வெளியாகியுள்ளது.
மெட் காலா அல்லது மெட் பால், நியூயார்க் நகரத்தில் நடத்தப்படும் வருடாந்திர நிதி திரட்டும் நிகழ்ச்சியாகும். இதில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா 2017 ஆம் ஆண்டு முதல் இந்த வருடம் மூன்றாம் முறையாக மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் நடிகை பிரியங்கா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதேபோல் இந்த ஜோடி மெட் காலா 2023-ல் கைகோர்த்து நடந்தது நிகழ்ச்சியின் ”கப்புல் கோல்” அங்கீகாரத்தை பெற்றது. பிரியங்காவின் பளபளக்கும் வைர நெக்லஸ் மற்றும் அழகிய ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பிரியங்கா சோப்ராவின் அழகான வாலண்டினோ உடை மற்றும் பளபளப்பான 11.6 காரட் வைர நெக்லெஸ் பிரபல நிறுவனமான பல்கேரியில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வைர நெக்லஸ்ஸின் விலை ரூ.204.5 கோடி மற்றும் அது ப்லூ லகூன் நெக்லெஸ் வகையை சேர்ந்தது. வைர நெக்லெஸ் மெட்காலா 2023 நிகழ்வுக்குப் பிறகு ஏலம் விடப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அழகான நெக்லஸின் படத்தை பகிர்ந்துள்ளார். பல்கேரி நிறுவனம் இதுவரை விற்பனை செய்ததில் இந்த லகுனா ப்ளூ வைரம் மிகவும் விலை உயர்ந்ததாகும்.







