சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து: உடையாத பீர் பாட்டில்களை தூக்கி கொண்டு ஓடிய இளைஞர்கள்!

கிருஷ்ணகிரி அருகே மேம்பால சுவரில் மோதி பீர் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. சிதிறி கிடந்த பீர் பாட்டில்களில், உடையாதவற்றை இளைஞர்கள் அள்ளி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த பந்தாரப்பள்ளி மேம்பாலம்…

கிருஷ்ணகிரி அருகே மேம்பால சுவரில் மோதி பீர் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. சிதிறி கிடந்த பீர் பாட்டில்களில், உடையாதவற்றை இளைஞர்கள் அள்ளி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அடுத்த பந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகே நேற்று மாலை பீர் லோடு ஏற்றிய லாரி ஒன்று வந்தது. அப்போது பந்தாரப்பள்ளி மேம்பாலம் ஏறும் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பால சுவரில் மோதி, சர்வீஸ் ரோட்டில் சிறிது தூரம் சென்று கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர்தப்பினார். லாரியிலிருந்து பீர் பாட்டில்கள் ரோட்டில் விழுந்து உடைந்து ஆறாக ஓடியது. தகவல் அறிந்து குருபரப்பள்ளி போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விசாரணையில் பீர் லோடு ஏற்றிய லாரி, கோவாவிலிருந்து பாண்டிச்சேரிக்கு சென்றது தெரிந்தது. பீர் லோடு லாரி கவிழ்ந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அப்போது பீர் லோடு லாரி கவிழ்ந்ததால், மீதமுள்ள பீர் பாட்டில்களும் வீணாகியிருக்கும் எனக்கருதி சிதறி கிடந்த மற்ற பீர்பாட்டில்களையும் பொக்லைன் மூலம் உடைத்து, பின்னர் பாட்டில்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கோடை காலத்தில் ஒரு பீர் கிடைப்பதே அரிதான நிலையில் ஒரு லாரி லோடு பீரை கொட்டி விட்டனரே என குடிமகன்கள் புலம்பியவாறு நின்றுள்ளனர். போலீசார் கவனிக்காத நேரத்தில் உடைபடாமல் இருந்த பீர்பாட்டில்களை இளைஞர்கள் தூக்கி கொண்டு ஓடினர். அவர்களை போலீசார் பிடிப்பதற்குள் வேறு திசையிலிருந்து வந்தவர்கள் பீர் பாட்டிலை தூக்கி கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.