தங்கமுலாம் பூசிய பானிபூரியா?…இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பெங்களூருவில் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசிய பானிபூரி விற்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  சாலையோர துரித உணவுகளில் உணவுப் பிரியர்களால் அதிகம் விரும்பப்படும் தீனிகளில் ஒன்று பானிபூரி.  பானிபூரியின் பெயரைக் கேட்டாலே…

பெங்களூருவில் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசிய பானிபூரி விற்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சாலையோர துரித உணவுகளில் உணவுப் பிரியர்களால் அதிகம் விரும்பப்படும் தீனிகளில் ஒன்று பானிபூரி.  பானிபூரியின் பெயரைக் கேட்டாலே வாயில் எச்சில் ஊறும்.  புதினா தண்ணீர் வைத்து பூரி சாப்பிடுவதை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஆனால் தங்க முலாம் மற்றும் வெள்ளிமுலாம் பூசி,  தேன் ஊற்றி யாராவது பானிபூரி சாப்பிட்டு இருக்கிறீர்களா? தற்போது தங்கமுலாம் பூசிய பானிபூரி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தங்க தட்டில் பூரி வைக்கப்பட்டு அதில் துருவிய பாதம்,  பிஸ்தா போடப்படுகிறது.  பின்னர் பானிக்கு பதிலாக தேன் மற்றும் தண்டாய் கலவையை ஊற்றுகின்றனர்.  பின்னர் பூரியில் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்படுகிறது.  இந்த வீடியோ 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது . இதற்கு பலரும் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  அதில் சில கருத்துகளை இங்கு காண்போம்.

இது பானிபூரி இல்லை.  ட்ரை ப்ரூட் பூரி.

என்னடா இது பானிபூரிக்கு வந்த சோதனை.

ஆர்ஐபி பானிபூரி.

அதன் பெயரையும் மாற்றிவிடுங்கள்.

என்னுடைய பவர தவறா பயன்படுத்துறாங்க அம்மா ( பானிபூரி மைண்ட்வாய்ஸ்).

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.