ஒரே பெண்ணை தந்தையும் மகனும் திருமணம் செய்து கொண்டதாக பரவும் செய்தி உண்மையா?

This news Fact Checked by ‘Newsmeter‘ தந்தையும் மகனும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். வயது மூத்த பிராமணர்கள்…

Is it true that the news that a father and son married the same woman is spreading?

This news Fact Checked by ‘Newsmeter

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

வயது மூத்த பிராமணர்கள் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரவியது. தற்போது, “சங்கிங்க உலகமே தனி தான் கதையல்ல நிஜம்.. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி..” என்ற கேப்ஷனுடன் சமூகவலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், மாலையுடன் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் இருப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

நியூஸ் மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இக்காணொலி திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.

உண்மை சரிபார்ப்பு:

இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொளி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அதன் ஒரு பகுதியில், “இந்த காணொலி முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது. இனம், நிறம், வம்சாவளி, தேசிய அடையாளம், இனக்குழு, வயது, மதம், திருமணம் அல்லது பெற்றோர் நிலை, உடல் அல்லது மன குறைபாடு, பாலினம், நோக்குநிலை பாலினம், பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அவமரியாதை அல்லது அவதூறு செய்யும் நோக்கம் இக்காணொலியில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், அதில் Kanhaiya Singh என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைக் கொண்டு யூடியூபில் Kanhaiya Singh என்று சர்ச் செய்து பார்த்ததில், கடந்த நவம்பர் 10-ம் தேதி வைரலாகும் அதே காணொலி Kanhaiya Singh shorts என்ற யூடியூப் சேனலில் கிடைத்தது. மேலும், அதே சேனலில் அக்காணொலியில் வரக்கூடிய நபர்கள் நடித்துள்ள பல்வேறு பொழுதுபோக்கு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

முடிவு:

நம் தேடலின் முடிவாக தந்தையும் மகனும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் அக்காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.