முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழில் படமா? தோனி தரப்பில் விளக்கம்

தோனி எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழில் படம் தயாரிப்பது குறித்து வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளது. 

பிரபல கிரிக்கெட் வீரரான தோனிக்கு தமிழ் நாட்டில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டனாக உள்ள தோனிக்கு தமிழ்நாடு ரசிகர்கள் தல தோனி என பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தோனி தமிழில் படம் தயாரிக்க உள்ளதாகவும், ரஜினியின் உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவருடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க போவதாகவும் அதில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தி பொய்யானது என தோனி எண்டர்டெயின்மென்ட் சார்பில் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

அதில், தோனி எண்டர்டெயின்மென்ட் தற்போது சஞ்சய் என்ற யாருடனும் இணைந்து செயல்படவில்லை. எந்தவொரு நபரையும் பணியமர்த்துவதை நாங்கள் மறுக்கிறோம். மேலும் இந்த மோசடி குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் குழு தற்போது பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருகிறது. அதை விரைவில் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம் என தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைந்தது!

Ezhilarasan

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு

Arivazhagan CM

பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து லேசான நில அதிர்வு

Arivazhagan CM