கோடை காலத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துவது சதியா? – உண்மை என்ன?

This News is Fact Checked by The Healthy Indian Project (THIP) நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தல் கோடை காலத்தில் வேண்டுமென்றே நடத்தப்படுவதாகவும்,  இதனால் வாக்குசதவீதம் குறையும் என கூறுவது ஆதாரமற்றது என…

This News is Fact Checked by The Healthy Indian Project (THIP)

நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தல் கோடை காலத்தில் வேண்டுமென்றே நடத்தப்படுவதாகவும்,  இதனால் வாக்குசதவீதம் குறையும் என கூறுவது ஆதாரமற்றது என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் கடும் வெயில் காலத்தில் நடத்தப்படுவதால், பாதி பேர் வாக்களிக்க வரவில்லை எனவும், வாக்குப்பதிவை 5-6 மாதங்களுக்குப் பிறகு நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சமூக வலைதள பதிவு மூலம் கூறப்பட்டு வருகிறது. இந்த பதிவை சரிபார்த்தபோது, ​​இந்தக் கூற்று முற்றிலும் தவறானது என கண்டறியப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு

இந்தியாவில் பொதுத் தேர்தல்களின் வரலாறு என்ன? 

1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பொதுத் தேர்தல்கள் 25 அக்டோபர் 1951 மற்றும் 21 பிப்ரவரி 1952 க்கு இடையில் நடத்தப்பட்டன. அந்த நேரத்தில், பெரும்பாலான மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.  இந்தத் தேர்தல்கள் 26 நவம்பர் 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் விதிகளின் கீழ் நடத்தப்பட்டன. 

அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, மக்களவை இடைக்கால நாடாளுமன்றமாக செயல்பட்டது. அதே நேரத்தில் ஜவஹர்லால் நேரு தலைமையில் ஒரு இடைக்கால அமைச்சரவை செயல்பட்டது.

  • இந்தியாவின் முதல் தேர்தல் ஏழு கட்டங்களாக 1952-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நடைபெற்றது.
  • அதேபோல, பிப்ரவரி 1962-ம் ஆண்டு ஏழு நாள் வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • மார்ச் 1971-ம் ஆண்டு ஒன்பது நாட்களாக நடைபெற்றது.
  • ஜனவரி 1980-ம் ஆண்டு மூன்று நாள் வாக்குப்பதிவாக நடைபெற்றது. இந்த தேர்தலே இதுவரை கணித்ததில் மிகவும் குறைந்த நாள் நடைபெற்றது.
  • 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அந்த ஆண்டு டிசம்பரில் முன்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்பட்டதன் மூலம் காலவரிசை மாறியது.
  • அடுத்த பொதுத் தேர்தல் 1989-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது.
  • இந்தியாவில் முதன்முதலில் 1991-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கோடை காலத்தின் உச்சத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • புதிய பிரதமர் சந்திர சேகர் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியவில்லை என்பதால், அடுத்த தேர்தல் ஏப்ரல் 1996-ம் ஆண்டு நடைபெற்றது.
  • இதனிடையே தேர்தல் சுழற்சி 1998 இல் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. தேர்தல்கள் திட்டமிடப்பட்டதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக நடத்தப்பட்டன.
  • செப்டம்பர் 1999 இல் 13வது பொதுத் தேர்தல் நடைபெற்றது.
  • 14வது பொதுத்தேர்தல் அக்டோபர் 2004-ம் ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் அரசியல் குளறுபடி காரணமாக அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. எனவே 14வது பொதுத் தேர்தல்கள் ஏப்ரல் முதல் மே வரை 21 நாட்களுக்கு 4 கட்டங்களாக நடத்தப்பட்டன.
  • இதைத்தொடர்ந்து, கடந்த நான்கு பொதுத் தேர்தல்களும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கடுமையான வெயில் காலத்தில் நடைபெற்றன.

எனவே, 2024 லோக்சபா தேர்தல் வேண்டுமென்றே கடும் வெப்பத்தில் நடத்தப்பட்டு, ஓட்டுப்பதிவு குறைக்கப்படுவதாக கூறுவது முற்றிலும் தவறானது.

லோக்சபா என்றால் என்ன? 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 79வது பிரிவின்படி, மக்களவை என்பது நாடாளுமன்றத்தின் கீழ் சபையாகும். மக்களவை என்பது வயது வந்தோருக்கான வாக்குரிமையின் அடிப்படையில் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டது. தற்போது 17வது லோக்சபா நடந்து வரும் நிலையில், அதன் பதவிக்காலம் ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைவதால், 18வது மக்களவைக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக 44 நாட்களில் நடைபெறுகிறது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு யார் பொறுப்பு? 

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி மற்றும் நிரந்தர அரசியலமைப்பு அமைப்பாகும். இது இந்தியாவில் யூனியன் மற்றும் மாநில தேர்தல் செயல்முறைகளை நடத்துவதற்கு பொறுப்பாகும்.

இந்திய தேர்தல் ஆணையம் நாட்டில் நடைபெறும் பொதுத்தேர்வு அட்டவணைகள், மத விழாக்கள், பொது விடுமுறைகள், இந்தியாவின் அளவு மற்றும் வெவ்வேறு பிராந்திய காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து வாக்குப்பதிவு தேதிகள் மற்றும் கால அளவை தீர்மானிக்கிறது.

இந்த அமைப்பு இந்தியாவில் மக்களவை, ராஜ்யசபா, மாநில சட்டப் பேரவைகள் மற்றும் நாட்டில் உள்ள தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களை நடத்துகிறது. இது 1949-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 1950-ம் ஆண்டு சுகுமார் சென் முதல் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை நிறைவேற்றியது.

லோக்சபா தேர்தலை கோடையில் நடத்துவது குறித்து கேள்விகளை எழுப்புகிறதா? 

“2024 லோக்சபா தேர்தல் கோடையில் வேண்டுமென்றே நடத்தப்படுகிறது. இதனால் வாக்காளர்கள் குறைவாக வருவார்கள் அல்லது வருவதில் சிரமம் ஏற்படும்” இதுபோன்ற கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை.

பல்வேறு வாக்குச் சாவடிகள் மற்றும் தேர்தல் செயல்முறைகளுக்கான சிறப்பு வழிகாட்டி தேர்தல் ஆணையத்தால் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலை இங்கே பார்க்கலாம். 

  • மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளி படுவதை தவிர்க்கவும்.
  • தாகம் எடுக்காவிட்டாலும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிக்கவும்.
  • பயணத்தின் போது உங்களுடன் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது. 
  • அதிகப்படியான புரதம் மற்றும் பழைய உணவு போன்றவற்றைத் தவிர்த்தல். 

இது தவிர, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களில் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. 

  • மருத்துவப் பெட்டி: மருந்துகள் மற்றும் துணைப் பொருட்கள் அடங்கிய மருத்துவப் பெட்டிகள்/முதலுதவிப் பெட்டிகள் போதுமான எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 
  • கோடை காலத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ORS வழங்குதல் , இதனால் எந்த வாக்காளரும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டால் அதை வழங்க முடியும்.

முடிவுரை

கோடையில் தேர்தலை நடத்துவதற்கு எதிர்மறையான எண்ணம் இருப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. எனவே, லோக்சபா தேர்தலை, கோடை காலத்தில் நடத்துவது, வாக்காளர் எண்ணிக்கையை குறைத்து விட்டதாக, மக்களவை மற்றும் கடைசி கூட்டத் தொடரில், கோரிக்கை வைத்தவர்கள் கூறியது தவறானது.

5-6 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டால், அதற்குள் மக்களவையின் பதவிக்காலம் முடிந்து விடும், அப்போது நாட்டின் ஆட்சியை மக்கள் யார் கையில் ஒப்படைப்பார்கள்? சரியான நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் தீர்ப்பை வழங்கினால் அது சரியானது மற்றும் எளிமையானது. ஏனெனில் இது நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது.

Note: This story was originally published by The Healthy Indian Project (THIP) and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.